Sunday, January 13, 2008

தபு சங்கர் கவிதைகள்

சில நேரங்களில் அவள் உள்ளங்கையில்
உயிர் வாழ்கிறாய்.
சில நேரம்
அவள் கன்னத்தை வருடுகிறாய்.
அப்புறம்
அவள் உதட்டையே ஒத்திப் பார்க்கிறாய்.
கடைசியில்
அவள்
இடையில் ஊஞ்சலாடி
ஓய்வெடுக்கிறாய்
கைகுட்டையே...
நீ குட்டியூண்டு துணி என்றாலும்
கொடுத்து வைத்த துணி.

- தபு சங்கர்
[தேவதைகளின் தேவதை]

No comments: